மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்ளும் கணவன் கிரிமினலா? மத்திய அமைச்சர் விளக்கம்

மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்ளும் கணவன் கிரிமினலா? மத்திய அமைச்சர் விளக்கம்
M375/0009
கட்டிய மனைவியாக இருந்தாலும் அவரது விருப்பத்தை மீறி அவருடன் உறவு கொண்டால் கிரிமினல் குற்றமாக கருதப்பட வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றுக்கொண்டால் குடும்ப உறவுகள் சீர்குலைந்துவிடும் என்றும், இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்றும்  மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பத்திற்கு பின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் தலைவர் ஜே.எஸ்.வர்மா அளித்த பரிந்துரைகளின்படி சட்டங்களில் ஒருசில திருத்தங்கள் செய்யப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் திருமணமான தம்பதிகளில் மனைவி விருப்பத்துக்கு மாறாக கணவர் உறவு கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என்பது.

இந்த பரிந்துரைக்கு நாடாளுமன்ற குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி மக்களவையில் பதிலளித்தபோது, ‘மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக்கினால் குடும்ப உறவு முறை சீர்குலைந்துவிடும்.

இதுபோன்ற பிரச்சனை ஏற்படும்போது கணவன் மனைவிக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து இந்த பிரச்சனையை தீர்க்க முயல வேண்டுமே தவிர கணவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவரை சிறைக்கு அனுப்பிவிட்டால் மனைவியும் அவருடைய குழந்தைகளும்தான் கஷ்டப்படுவார்கள் என இந்த பிரச்சனைக்கு சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply