கார் ஓட்ட அனுமதி இல்லாத சவுதி அரேபியாவில் விமானம் ஓட்டிய பெண்கள்

கார் ஓட்ட அனுமதி இல்லாத சவுதி அரேபியாவில் விமானம் ஓட்டிய பெண்கள்

flightஅரபுநாடுகளில் ஒன்றாகிய சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டக்கூட அனுமதி இன்னும் கிடைக்காத நிலையில் மூன்று பெண் விமானிகள் அந்த நாட்டில் ஒரு விமானத்தை பத்திரமாக இறக்கி சாதனை செய்துள்ளனர்.

சவுதி அரேபியா நாட்டில் இன்னும் பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படவில்லை. அதில் ஒன்று பெண்களுக்கு கார் ஓட்டக்கூட அனுமதி இல்லை. மீறி கார் ஓட்டும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புரூனே நாட்டின் ராயல் புருனே ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒரு விமானத்தை மூன்று பெண்கள் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் பத்திரமாக தரை இறக்கியுள்ளனர். பெண்கள் கார் ஓட்டக்கூட அனுமதி இல்லாத ஒரு நாட்டில் விமானத்தை இறக்கி காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விமானத்தை இயக்கியதாக அந்த விமானத்தின் கேப்டன் ஷரிபா சரீனா தெரிவித்துள்ளார்.

இவரது தலைமையில் சரீனா நோர்டின், டிக் நாடியா பிக் கசீம் ஆகிய இரண்டு பெண் விமானிகள் இணைந்து இந்த விமானம் சவுதி அரேபியா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இவர்கள் இயக்கிய விமானம் ‘போயிங் 787 டிரீம் லைனர்’ விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தின் கேப்டன் ஷரிபா சரீனா புரூனே நாட்டின் முதல் பெண் விமானி என்பது பலர் அறியாத தகவல்.

Chennai Today News: All-female flight crew lands plane in country they’re not allowed to drive in

Leave a Reply