சென்னைக்கு மிக அருகில் வீடு வாங்க போறிங்களா? அதற்கு முன்னர் இதை படியுங்க….

சென்னைக்கு மிக அருகில் வீடு வாங்க போறிங்களா? அதற்கு முன்னர் இதை படியுங்க….
real_estate_2663275f
சென்னையில் வசிக்கும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தின் அதிகபட்ச கனவே சொந்த வீடுதான்! சனிக்கிழமைகளில் செய்தித்தாள்களில் வரும் வீடு விளம்பரத்தில் நம்ம பட்ஜெட்க்குள்ள எதாவது வீடு கிடைக்குமா என கண்கள் தேடும். அதுவும் மழைக்குப் பிறகு வீடு விலை குறைந்துவிட்டது என்ற சந்தோஷம் இன்னொரு பக்கம்! ( மறுபடியும் மழையே வராதா?)  

’12 லட்ச ரூபாயில் சொந்த வீடு… சென்னைக்கு மிக அருகில்!’- என்ற விளம்பரம் கண்ணில் பட்டுவிட்டால் மனசுக்குள் ஏதோ வீடே வாங்கிவிட்ட மாதிரி சந்தோஷம் வரும். அடுத்த நாள் ஞாயிறு. அந்த விளம்பரத்தில் உள்ள நெம்பருக்கு போன் போட்டுவிட்டு, அவர்கள் சொன்ன முகவரியைத் தேடிப் புறப்படுவோம். போவோம்… போவோம்… போய்கிட்டே இருப்போம். செங்கல்பட்டில் பஸ்ஸை விட்டு இறங்கினால் அங்கே ஒருவர் நம்மை அழைத்துக் கொண்டு போக காத்திருப்பார். மறுபடியும் பயணம் தொடரும்.
 
’தென்கிழக்குச் சீமையில… செங்காத்து பூமியில…’ என கிழக்கு சீமையிலே படத்தில் பார்த்த மாதிரியே இருக்கும் அந்த ஏரியா. அங்கேதான் இருக்கும் நாம தேடிப்போன வசந்த மாளிகை. ’காலையில கிளம்பிப்போன சாய்ந்திரம் வரப்போறோம். சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். சொந்த கிராமத்துல இருக்கிற மாதிரியே இருக்கலாம்’ என்றெல்லாம் நமக்கு நாமே சமாதானம் செய்தபடி வீட்டை வாங்குவோம்.
 
மூணு மாசம் ரயிலைப் பிடிச்சு ஆபீஸ் போய்ட்டு வந்த பிறகுதான் மனசு யோசிக்கும்.. இதுக்கு வாடகை வீட்டுலேயே இருந்திருக்கலாமோ! வீடு வாங்குவது நல்ல விஷயம்தான். வீடு என்பது நமக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் இடம். அது எந்த சூழ்நிலையிலும் தொல்லையாக மாறிவிடக் கூடாது என்பதை நல்லா யோசிச்சு, அப்புறம் அட்வான்ஸ் கொடுங்க!
 
இன்னொரு குரூப் இருக்காங்க… கவர்மெண்ட்க்கு எதுக்கு டேக்ஸ் கட்டணும்? என்பதற்காகவே ஹவுசிங் லோனில் வீடு வாங்குவார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது பத்தில் ஒரு சொத்து. நடுத்தர வர்க்கத்துக்கு வீடு என்பது கனவுதானே! அப்படி நனவாகும் நல்ல கனவு எந்த காலத்துக்கும் தொல்லை இல்லாத சொர்க்கமாக இருக்க வேண்டும்.
 

 

Leave a Reply