ஏப்ரல் 1 முதல் எச்-1 பி விசா. குடியுரிமை பெறாமலே அமெரிக்காவில் வேலை செய்யலாம்
அமெரிக்க குடியுரிமை பெறாமலே அந்நாட்டில் தங்கி வேலை செய்ய வசதியாக எச்-1 பி விசாவை வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு இந்தியர்கள் பல நாட்டினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
2017-ம் நிதி ஆண்டுக்கான எச்-1 பிவிசா விண்ணப்பங்கள் அமெரிக்க அரசால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏற்றுக்க்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 65 ஆயிரம் எச்-1 பி விசாக்கள் வழங்கப்படும் என்றும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த 65 ஆயிரம் பேர்கள் தவிர முதுநிலை அல்லது உயர் பட்டங்கள் பெற்ற 20 ஆயிரம் பேர்களுக்கும் இந்த விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசா ஏப்ரல் 1முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினமே 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு கூறி உள்ளது. மேலும், மிக அதிக எண்ணிக்கையிலான எச்-1 பி விசா விண்ணப்பங்கள் பெறப்படுகிறபோது கணினி வழி லாட்டரி குலுக்கல் நடத்தி விசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.