300 ஆண்டுகளாக தீர்க்க முடியாத கணக்குக்கு தீர்வு கண்டுபிடித்த கணித மேதைக்கு ரூ.4.7 கோடி பரிசு

300 ஆண்டுகளாக தீர்க்க முடியாத கணக்குக்கு தீர்வு கண்டுபிடித்த கணித மேதைக்கு ரூ.4.7 கோடி பரிசு

maths300 ஆண்டுகளாக கண்டுபிடிக்காமல் இருந்த கணித சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடித்த கணித மேதை ஒருவருக்கு ரூ.4.7 கோடி பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும் அவருக்கு மிகப்பெரிய விருது ஒன்றும் காத்திருக்கின்றது.

கடந்த 1637ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கணித மேதையான பெய்ரி டி ஃபெர்மட் என்பவர் உருவாக்கிய ஃபெர்மட் தேற்றம் என்ற சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடிக்க கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான கணித ஆசிரியர்கள் முயற்சி செய்தும் தோல்விதான் கிடைத்தது. அந்த ஃபெர்மட் தேற்றம் இதுதான். There are no whole number solutions to the equation xn + yn = zn when n is greater than 2 என்னும் இந்த சமன்பாட்டுக்கு தீர்வு காண முடியாத நிலையில் இந்த சமன்பாட்டிற்கு 62 வயதாகும் ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியர் ஒரு தீர்வை கண்டுபிடித்து அனைவரையும் அசத்தியுள்ளார்.

இவர் இந்த தேற்றத்திற்கு கடந்த 994ம் ஆண்டே இந்த கணித சமன்பாட்டிற்கு தீர்வினை கண்டுபிடித்த போதிலும் தற்போதுதான் அவருக்கு விருதும் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. இவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாராலும் கண்டுபிடிக்க முடியாத தேற்றத்திற்கு தீர்வை கண்டுபிடித்த ஆண்ட்ருவுக்கு ஏபேல் என்ற மதிப்புமிக்க பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசு இந்திய மதிப்பில் ரூ.4.7 கோடி மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply