மத்திய அரசால் ஏமாந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முதலீட்டாளர்கள்

மத்திய அரசால் ஏமாந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முதலீட்டாளர்கள்

selvamagalசமீபத்தில் மத்திய அரசு ‘செல்வமகள்’ சேமிப்பு திட்டத்திற்கு 9.2 சதவீதம் வட்டி என்று அறிவித்த நிலையில் பெண் குழந்தைகளை வைத்திருந்த பெற்றோர்கள் தங்கள் செல்ல மகளின் எதிர்காலத்திற்காக மிகவும் ஆர்வத்துடன் முதலீடு செய்தனர். ஆனால் அவர்களை ஏமாற்றும் வகையில் தற்போது இந்த திட்டத்திற்கு 8.6 சதவீதம் மட்டுமே வட்டி என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி பொது வருங்கால வைப்பு நிதியான பிபிஎஃப், கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வழங்கப்படும் வட்டியையும் மத்திய அரசு குறைத்துள்ளது. பிபிஎஃப் வட்டி விகிதம் 8.7 சதவிகி‌த்தில் இருந்து 8.1 சதவிகிதமாகவும், கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 8.7 சதவிகிதத்தில் இருந்து 7.8 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்புப் பத்திரமான என்எஸ்சி-யின் வட்டியும் 8.5 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வட்டி விஷயத்தில் கைவைக்காத ஒரே திட்டம், அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு தொடர்ந்து 4 சதவீதம் வட்டி என்பது மட்டும்தான்.

Leave a Reply