விஜயகாந்துக்கு ஷாக் கொடுத்த மு.க.ஸ்டாலின். தனித்து விடப்பட்ட கேப்டன்

விஜயகாந்துக்கு ஷாக் கொடுத்த மு.க.ஸ்டாலின். தனித்து விடப்பட்ட கேப்டன்

Stalin-Vijayakanth (1)திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து நிற்பதாகவும் சமீபத்தில் கேப்டன் அறிவித்தாலும் தன்னுடைய தலைமையை ஏற்றுக்கொள்பவர்களுடன் கூட்டணி என்று அறிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பு வெளிவந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஒருவர் கூட அவரது தலைமையை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் வேறு வழியின்றி மீண்டும் திமுக கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தையை கேப்டன் தரப்பில் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேப்டனுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடியாக ஒரு செக் வைத்துள்ளார்.

தேர்தலுக்கு பின்னர் திமுக ஆட்சி அமைத்தால் கூட்டணிக்கு கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று அவர் திட்டவட்டமாக நேற்று கூறியுள்ளார். இதனால் விஜயகாந்துக்கு துணைமுதல்வர் உள்பட எந்த அமைச்சர் பதவியும் கிடையாது என்பதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனால் தேமுதிக தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.

மக்கள் நலக்கூட்டணியும், பாஜகவும் இன்னும் கதவை திறந்து வைத்திருந்தாலும், அந்த கூட்டணியில் இணைவதால் எந்தவித லாபமும் இல்லை என்பதால் அந்த அணிகளில் தேமுதிக இணைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply