வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு சீட் கிடைக்காத மாணவர்களில் சிலர் வெளிநாட்டில் மருத்துவ படிப்பை படித்து வருகின்றனர். இவ்வாறு வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்த மாணவர்கள் கண்டிப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அப்போதுதான் அவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய முடியும். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த மாணவர்களில் 77% பேர் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர் என்ற திடுக்கிடும் செய்தி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்துள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவ கல்வியை முடித்தவர்களில் கடந்த 2004-ம் ஆண்டு 4 சதவீத மாணவர்கள் மட்டுமே இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் நடத்திய தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 2005ஆம் ஆண்டில் மட்டும் 76.8 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆனால் 2015ஆம் ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் 10.4 சதவீதமும், 11.4 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தகுதி தேர்வில் 5,967 மாணவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெறும் 282 மாணவர்களே ஆகும். அதாவது 4% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Chennai Today News: 77% Indians with foreign med degree fail MCI hurdle since 2004