ஏப்ரல் 1 முதல் ரிலீஸ் ஆகிறது சுந்தர் சியின் பேய்ப்படம்

ஏப்ரல் 1 முதல் ரிலீஸ் ஆகிறது சுந்தர் சியின் பேய்ப்படம்
hello
கோலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் பேய்ப்பட சீசனில் தன்னை இணைத்து கொண்ட பிரபல இயக்குனர் சுந்தர் சி, தொடர்ந்து ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை 2’ என இரண்டு பேய்ப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது அவர் பேய்ப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’ என்ற தலைப்பில் உருவான இந்த படம் வரும் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

சுந்தர் சியின் உதவியாளர் எஸ்.பாஸ்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி கணேஷ், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்திற்காக  ‘மஜ்ஜா மல்ச்சா’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்

பேய்ப்படங்களின் வரிசையில் உருவாகியுள்ள இந்த படம் திகில் மற்றும் நகைச்சுவை கலந்து அமைந்துள்ளதாகவும், இந்த படம் நிச்சயம் ரசிகர்களையும் பயமுறுத்தவும் செய்யும், சிரிக்க வைக்கவும் செய்யும் என்றும் இயக்குனர் பாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply