இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த பரிசுதான் நரேந்திரமோடி. வெங்கையா நாயுடு புகழாரம்

இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த பரிசுதான் நரேந்திரமோடி. வெங்கையா நாயுடு புகழாரம்
vengaiya-naidu
பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளதாகவும் அவர் பிரதமர் மட்டுமின்றி இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த பரிசாகவும் திகழ்கிறார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ‘நரேந்திர மோடி ஏழைகளை காக்கும் ரட்சகன்.  ஒவ்வொரு துறையிலும் அவர் ஏராளமான சவால்களை எதிர்கொண்டு, அவற்றை எல்லாம் களைந்து நம்மை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். அவரது புகழ் உலகம் முழுவதும் பரவ புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவை பலமான, வளமான நாடாக மாற்றுவதற்காகவே நரேந்திர மோடி இரவு பகல் பாராது உழைத்து வருகிறார். சுருக்கமாக சொன்னால் இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த பரிசாகவே அவர் மக்களிடையே திகழ்ந்து வருகிறார் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். அவரது பேச்சுக்கு இந்த கூட்டத்தில் பெரும் கரகோஷம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply