பெல்ஜியக் தொடர் வெடிகுண்டு தாக்குதல். ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் 200 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருசிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘வெடிப்பொருட்களுடன் விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் பாரிஸ் தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரஸ்ஸல்ஸ் காவல்துறையினர் பிடித்ததற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
Chennai Today News: Brussels attacks: ISIS issues guide to jihadi ‘brothers’ in Belgium on how to AVOID being caught by police