நான் தான் கிங். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கிங்மேக்கர்கள். விஜயகாந்த்
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்து, விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஜயகாந்த் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம், நான் பொதுவா வந்து இந்த மிட்டிங்கில் நிறைய பேசுவேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு முன்னதாக அவர்கள் நிறைய பேசி விட்டாங்க. அதாவது இங்கே நான்கு பேர் வந்தார்கள். நீங்க கிங்கா இருங்க, நாங்க கிங்மேக்கரா இருக்கிறோம் என்றார்கள். கூட்டணி ஆட்சி என்று கேட்டார்கள், தாராளமாக அறிவித்துவிடுங்கள் என்று கூறிவிட்டேன்.
பணத்தாசையில் விஜயகாந்த் அங்கே போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று சொன்றார்கள். நான் யாரு பக்கமும் விலைபோகவில்லை. அன்றே சொன்னேன், தெய்வத்தோடும், மக்களோடுதான் கூட்டணி. தெய்வம் தான் வழிகாட்டும். மக்கள் நலக்கூட்டணிக்கு தெய்வம் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியாது. ஆனால் எனக்கு தெய்வம் பிடிக்கும். நான்கு பேரும் நான்கு விதமான கொள்கை உடையவர்கள் என்று நினைக்காதீர்கள், நான்கு பேரும் ஒரே கொள்கையை கொண்டவர்கள்.
என்னை விட இவர்கள் அனைவரும் மூத்தவர்கள்தான். ஏன் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள், என்னை ஏற்றுக்கொண்ட அவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. அதிக நேரம் நான் பேசவிரும்பவில்லை. இருந்தாலும் இங்கே வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்களே.