234 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் தயார். பாஜக அறிவிப்பு

234 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் தயார். பாஜக அறிவிப்பு
tamilisai
தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து ஏமாந்த கட்சிகளில் ஒன்று பாஜக. தற்போது தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துவிட்டதால் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்பது போல தற்போது தேமுதிக தயவு இல்லாமல் தமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயார் என்றும் அறிவித்துள்ளது.

சமீபத்தில் தமிழக தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரகாஷ் ஜவடேகர், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா,  முரளிதர ராவ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி ஒருவர், “தமிழகத்தில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவுக்கு மேலும் இரு தினங்கள் காத்திருக்கலாம் என தமிழக தலைவர்களிடம் அமித்ஷா கூறினார். இது முடியாதபட்சத்தில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட தயாராகும்படியும் அவர் வலியுறுத்தினார்.

அப்போது அவரிடம் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 3 வேட்பாளர்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைவர்கள் கூறினர். இதற்கு பாராட்டு தெரிவித்த அமித்ஷா, இதை நன்கு ஆராய்ந்து, கூட்டணி முடிவுக்குப் பிறகு தாம் கூறும்போது அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்’ என்று கூறினார்.

Leave a Reply