மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்

மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்
vijay and vishal
ஏற்கனவே இளையதளபதி விஜய் நடித்த ‘கத்தி’ படத்துடன் விஷாலின் ‘பூஜை’ மோதிய நிலையில் மீண்டும் விஜய்யுடன் ‘புலி’யுடன் விஷாலின் ‘பாயும் புலி’ மோத இருந்தது. ஆனால் இரண்டு படங்களும் பல்வேறு காரணங்களால் ஒருசிறு இடைவெளியில் மோதியது. இந்நிலையில் மீண்டும் விஜய் படத்துடன் விஷால் படம் மோதவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய்யின் ‘தெறி’ வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கிட்டத்தட்ட அதே தினத்தில் விஷால் நடித்து நீண்டகாலமாக கிடப்பில் இருந்து ‘மதகஜராஜா’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply