டொனால்ட் டிரம்ப் அதிபரானால் இந்தியாவுக்கு பாதிப்பு. சல்மான் குர்ஷித் கவலை

டொனால்ட் டிரம்ப் அதிபரானால் இந்தியாவுக்கு பாதிப்பு. சல்மான் குர்ஷித் கவலை

donaldதற்போதைய அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும், டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஹிலாரி கிளிண்டன் ஏற்கனவே இந்தியாவுடன் இணக்கமாக இருந்தவர் என்றும் ஆனால் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர் என்றும் இதனால் அடுத்த அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டால் அது, இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் மாணவர்களுடன் சல்மான் குர்ஷித் உரையாடியபோது, அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமா மற்றும் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுபவர் பற்றி தங்கள் கருத்து என்ன? என்ற மாணவர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், “வருங்காலத்தில் அமெரிக்கா மக்களால் தேர்வு செய்யப்படவுள்ள அதிபர் யார்? என்ற விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். ஒருவேளை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது இந்தியாவுக்கு மிகவும் கவலையை தரக் கூடும். மேலும் தற்போதைய அதிபர் ஒபாமா, இந்திய வரலாற்றில் நல்ல நண்பராக இடம் பெறுவார். அவருடனான உறவு இந்தியாவுக்கு செளகரியமானதாக இருந்தது. ஒபாமா முதல்முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றபோது அவருக்காக இந்தியாவில் உள்ளவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்றாலும்கூட, அவரது வெற்றி பரவலாகக் கொண்டாடப்பட்டது’ என்று கூறினார்.

Chennai Today News: donald

Leave a Reply