மனித வெடிகுண்டாக மாறும் முன் உயில் எழுதி வைத்த பெல்ஜியம் தீவிரவாதி.

மனித வெடிகுண்டாக மாறும் முன் உயில் எழுதி வைத்த பெல்ஜியம் தீவிரவாதி.

belgiumநேற்று முன்தினம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புரூசெல்ஸ் நகரில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் 2 பேரும் சகோதரர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இருவருமே பிராம் விமான நிலையத்திலும், காலித் சுரங்க ரெயில் நிலையத்திலும் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இவர்களில் பிராம் என்பவரின் கம்ப்யூட்டரை நேற்று பெல்ஜியம் போலீசார் சோதனை செய்து பார்த்தபோது, அந்த தீவிரவாதி தனது சொந்த கம்ப்யூட்டரில் உயில் போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த உயிலில் அவன், “நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டையாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை” என எழுதியுள்ளார். ‘அவர்’ என்று பிராம் குறிப்பிட்டிருப்பது பாரீஸ் தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள தீவிரவாதி சலா அப்தே சிலாமை குறிப்பதாக இருக்கும் என ஊகிக்கப்படுகிறது.

இந்த கம்ப்யூட்டர், புரூசெல்ஸ் நகரில் ஒரு குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதே பகுதியில்தான் வெடிக்காத ஒரு குண்டையும் போலீசார் கண்டெடுத்ததாகவும் பெல்ஜியம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply