அனைத்து கோவில்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும். காஷ்மீர் முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

அனைத்து கோவில்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும். காஷ்மீர் முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்
farooq
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கோவில்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய ஹோலி பண்டிகையில் முதன்முதலாக கணவரை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி கொண்டாடியது ஒரு நல்ல விஷயம் என்றும் இந்தியா சரியான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த அடையாளம் என்று கூறிய அவர், பெண்களும் நமது நாட்டின் ஒரு பகுதிதான். எனவே பெண்களை அனைத்து கோவில்களிலும் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இருந்த இழுபறி நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கூறிய ஃபரூக் அப்துல்லா, பி.டி.பி.-பா.ஜ.க கட்சியினர் முதலில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு ஓராண்டு கழித்துதான் இந்த ஆட்சி குறித்து விமர்சனங்களை தெரிவிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply