குண்டுவெடிப்பு எதிரொலி: பிரதமர் மோடியின் பெல்ஜியம் பயணம் ரத்து செய்யப்படுமா?

குண்டுவெடிப்பு எதிரொலி: பிரதமர் மோடியின் பெல்ஜியம் பயணம் ரத்து செய்யப்படுமா?

VBK-MODI_1865200f_2646360fபெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பு காரணமாக அந்நாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் செல்வது ரத்து செய்யப்படாது என மத்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய பகுதிகள் நேற்று முன் தினம் அடுத்தடுத்து சக்திவாயந்த குண்டுவெடிப்புகளை தீவிரவாதிகள் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 34 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மார்ச் 30ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் பிரதமரின் பயணம் உகந்தது அல்ல என்று கூறப்பட்டு வந்தபோதிலும், பிரதமரின் பயணம் ரத்து செய்யப்படாது என்றும் திட்டமிட்டபடி 30ஆம் தேதி பிரதமர் மோடி பெல்ஜியம் செல்வார் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.

இருப்பினும் பிரதமர் மோடியின் வருகையின்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க பெல்ஜியம் அரசை வலியுறுத்தியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply