ஆசியாவிலேயே இண்டர்நெட் வேகம் குறைந்த நாடு எது? கருத்துக்கணிப்பில் தகவல்

ஆசியாவிலேயே இண்டர்நெட் வேகம் குறைந்த நாடு எது? கருத்துக்கணிப்பில் தகவல்

FEATURE-INTERNET-MICROSOFT-WINDOWS-SMARTPHONEஉலகில் தற்போது இண்டர்நெட்டை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட உருவாகியுள்ள நிலையில், இண்டர்நெட் வேகம் குறித்து ஒரு கருத்துக்கணிப்பை அகமை டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது உலகில் எந்த நாட்டில் இண்டர்நெட் வேகமாக உள்ளது, எந்தெந்த நாடுகளில் மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதை அறிவதே இந்த கருத்துக்கணிப்பின் நோக்கம்.

இந்த கருத்துக்கணிப்பின்படி ஆசிய நாடுகளில் மிக அதிகமான வேகம் கொண்ட இண்டர்நெட் சேவை தென்கொரியா நாட்டில் உள்ளதாக அதாவது 26.7 எம்.பி.பி.எஸ் வேகத்தில் அந்நாட்டில் இண்டர்நெட் செயல்படுவதாக கூறியுள்ளது. அதே நேரத்தில் ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான் இண்டர்நெட்டின் வேகம் குறைவாக உள்ளதாகவும் அதாவது 21.2 எம்.பி.பி.எஸ் வேகத்தில் சேவை வழங்கி வருவதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் இண்டர்நெட் சராசரி வேகத்தில் பிரிட்டன் 26.8 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது.. ஸ்பெயின் 14 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஈரான் மற்றும் வியட்நாம் நாடுகள் மிகவும் குறைந்த வேகத்தில் மொபைல் இண்டர்நெட் சேவையை வழங்குகின்றன.

Leave a Reply