பெல்ஜியம் அணுமின் நிலையத்தை தகர்க்க திட்டமா? அதிர்ச்சி தகவல்

பெல்ஜியம் அணுமின் நிலையத்தை தகர்க்க திட்டமா? அதிர்ச்சி தகவல்

belgiumபெல்ஜியம் நாட்டு தலைநகரான பிரசல்ஸ் நகரின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில் பெல்ஜியம் நாட்டின் அணு மின் நிலையத்தையும் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரச்சல்ஸ் தாக்குதலில் 35 பேர்களை பலிகொடுத்துவிட்டு அதிர்ச்சியில் இன்னும் மீண்டு வராத பெல்ஜியம் நாட்டின் மக்கள் நாட்டின் அணு மின் நிலையத்தை தகர்க்க திட்டமிட்டிருப்பதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல் கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து வெளிவந்துள்ளதால் அதிர்ச்சியில் உச்சகட்டத்தில் உள்ளது பெல்ஜியம் அரசு.

பெல்ஜியம் அணுசக்தி திட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் வீட்டுக்கு அருகில் புதர்களில் அவர்கள் கேமராக்களை மறைத்து வைத்து சுமார் 10 நேரம் தீவிரவாதிகள் உளவு பார்த்துள்ளதாகவும் அணு மின்சக்தியின் இயக்குனரை கடத்தி அணுமின் நிலையத்தை தகர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் என்றும் உள்ளூர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த தகவலை அடுத்து பெல்ஜியம் நாட்டின் அணுமின் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து அணுமின் நிலையம் பாதுகாக்கப்படும் என்றும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply