ஈராக்: கால்பந்து மைதானத்தில் மனித வெடிகுண்டு வெடிப்பு. மேயர் உள்பட 30 பேர் பலி

ஈராக்: கால்பந்து மைதானத்தில் மனித வெடிகுண்டு வெடிப்பு. மேயர் உள்பட 30 பேர் பலி
iraq
பெல்ஜியம் நாட்டின் தலைநகரில் சமீபத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு இராக் நாட்டின் கால்பந்து மைதானத்தில் இன்று நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ். ஐ தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான ஈராக் நாட்டின் பகுதிகள் இருக்கும் நிலையில் நேற்று தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஒரு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. போட்டிகள் முடிவடைந்து  வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தபோது மனித வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

சம்பவ இடத்திலேயே 30 பேர் கை, கால்கள் சிதறி உயிரிழந்தனர். மேயர் அகமது ஷாக்கருக்கும் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்று கொள்ளவில்லை எனினும் இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் கைவரிசையாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட உலகத்தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply