ஜி.கே.வாசன் முடிவால் தேமுதிகவுக்கு பாதிப்பா? பரபரப்பு தகவல்

ஜி.கே.வாசன் முடிவால் தேமுதிகவுக்கு பாதிப்பா? பரபரப்பு தகவல்

gk vasanஅதிமுகவில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸூக்கு இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு கூட்டணி குறித்து வராததால், மக்கள் நல கூட்டணியில் இணைய ஜி.கே.வாசன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக அல்லது அதிமுக கூட்டணியில்தான் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியானவுடன் ஜி.கே.வாசன் அதிமுக கூட்டணியில்தான் இணைவார் என்று பரவலாக கூறப்பட்டது. இருப்பினும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் ஜி.கே.வாசனுக்கு அழைப்பு விடுத்தவண்ணம் இருந்தனர்.

ஆனால் இதுவரை அதிமுகவிடம் இருந்து முறையான அழைப்பு தமாகவுக்கு வரவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் வைகோ, திருமாவளவன் மற்றும் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியதாகவும், மக்கள் நலக்கூட்டணிக்கு வர கிட்டத்தட்ட வாசன் சம்மதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ஜி.கே.வாசன் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தால் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 124 தொகுதிகளில் இருந்து தமாகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply