சென்சாருக்கு சென்றது ‘தெறி’ திரைப்படம்
விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கடந்த சில நாட்களாக இரவு பகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் நேற்று ‘தெறி’ படம் சென்சார் செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை இந்த வாரத்திற்குள் பார்த்து சான்றிதழ் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தாணு தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.