இந்தியாவின் தேசிய அவசர கால எண் 112. மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவின் தேசிய அவசர கால எண் 112. மத்திய அரசு அறிவிப்பு
112
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நாடு முழுவதற்குமான அவசரகால எண் ஒன்று உண்டு. அந்த எண்ணை தொடர்பு கொண்டு நமக்குள்ள பிரச்சனையை கூறினால், நமக்கு தேவையான உதவி உடனே வந்து சேரும். இந்த முறை தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108 ஆகிய எண்களும், அவசர கால அழைப்புகளுக்காக 101, 102 என பல்வேறு எண்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் அவசர கால உதவிக்கு மற்ற நாடுகளை போல் ஒரே எண்ணாக ஒரு எண்ணை வைக்க வேண்டும் என தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை தற்போது ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு காவல்துறை உதவி எண் தொடங்கி, தீயணைப்பு, ஆம்புலன்ஸ், பெண்களுக்கான உதவி எண், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்ணாக 112 ஆக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த எண் இந்தியாவின் தேசிய அவசரகால எண்ணாக அழைக்கப்படும்.

இதன்மூலம் அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் எஸ்.எம்.எஸ் மூலம் வரும் அழைப்புகளும் பெறப்படும். இந்த சேவை வெற்றிகரமாகவும், திறமையாகவும் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாநிலங்களில் அழைப்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளூர் மொழிகளில் பேசுவோரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என் கூறப்படுகிறது.

Leave a Reply