வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து வைத்த அமெரிக்க அதிபர் ஒபாமா
பெல்ஜியம் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சென்ற பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா, நேற்று வாஷிங்டன் விமான நிலையத்தில் மோடியை வரவேற்றார்.
இன்று பிரதமர் மோடி அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசுகிறார். அப்போது அவர் அணு ஆயுத தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெள்ளை மாளிகையில் மோடி உள்பட 50க்கும் மேற்பட்ட உலக தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விருந்தளித்தார்.
அணு பாதுகாப்பு உச்சி மாநாடு முடிந்த பின்னர் பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அதன் பின்னர் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பெல்ஜியம் சென்ற பிரதமர் மோடி சமீபத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.