செயலி புதிது: குரல் வழி உணவுக் கட்டுப்பாடு

செயலி புதிது: குரல் வழி உணவுக் கட்டுப்பாடு
app_2797105f
உடல் பருமனைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடே சிறந்த வழி. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க, உட்கொள்ளும் உணவின் அளவைக் கண்காணிப்பதும், அவற்றின் கலோரி தன்மையைத் தெரிந்துகொள்வதும் நல்ல வழி. ஆனால் இது எளிதானதல்ல. உணவு பற்றிய தகவல்களைத் தவறாமல் தொடர்ந்து பதிவுசெய்து வர பொறுமையும், விடாமுயற்சியும் அவசியம்.

இதற்காக என்றே ‘மைஃபிட்ன‌ஸ்பால்’ போன்ற செயலிகள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதுகூடச் சிக்கலானதுதான். ஒவ்வொரு வேளை சாப்பிடும் உணவு பற்றிய‌ தகவல்களைச் செயலியில் உள்ளீடு செய்வது என்பது அலுப்பூட்டுகிற விஷயம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலை ஆய்வாளர்கள் குரல் வழியாக உணவு விவரங்களைப் பதிவுசெய்ய உதவும் செயலியின் முன்னோட்ட வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்தச் செயலியிடம் சாப்பிட்ட உணவு பற்றிப் பேசுவது போல விவரித்தால் போதும், அந்த உணவுக்கான கலோரி விவரங்களைச் சேகரித்து அளிக்கிறது. ஆனால் இந்தச் செயலி இப்போதைக்கு முன்னோட்ட வடிவில்தான் இருக்கிறது. மேலும் இதில் அடையாளம் காணப்படும் விவரங்கள் பெரும்பாலும் அமெரிக்கர்களின் உணவுப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

Leave a Reply