மீண்டும் அதிபயங்கர ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா. அதிர்ச்சியில் உலக நாடுகள்
ஆசிய நாடுகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்குமே அச்சுறுத்தலாக இருக்கும் நாடாக வடகொரியா கருதப்படுகிறது. ஐ.நா மற்றும் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், பயங்கர விளைவுகளை விளைவிக்கும் ஹைட்ரஜன் குண்டுகளையும் சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா பொருளாதார தடை விதித்தது. இருப்பினும் வடகொரியா அடங்குவதாக இல்லை. இன்று மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று வடகொரியா நேரப்படி பிற்பகல் 12.35 மணியளவில் கண்டம் விட்டு கண்டம் தாவும் அதிநவீன சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா பரிசோதித்ததாக தென்கொரியா செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சான்டாக் நகரில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை எவ்வளவு தூரம் பாய்ந்து சென்றது என்பது குறித்த தகவல்களும், திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி, அழித்ததா என்பது குறித்தும் எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
1300 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்துச் சென்று தாக்கக்கூடிய வல்லமையுள்ள ‘ரோடாங்’ ஏவுகணைகளால் அண்டை நாடான ஜப்பானை நொடிப் பொழுதில் தாக்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Today News: North Korea launches missile as leaders meet in US to discuss nuclear security