இந்த வார ராசிபலன் 03/04/2016 முதல் 09/04/2016 வரை

இந்த வார ராசிபலன் 03/04/2016 முதல் 09/04/2016 வரை

weekly rasipalanநல்லதையே நினைக்கும், மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன், கேது, குரு நன்மை தருவர். உங்களைச் சார்ந்தவர்களின் வாழ்வு வளம்பெற உதவுவீர்கள். வாகனம் இயக்கும் போது, மிதவேகமாக செல்லவும். புத்திரர்கள் படிப்பு, செயல் திறனில் முன்னேற்றம் காண்பர். பிறர் விவகாரத்தில் தலையிட்டு, சமரசம் பேச சென்றால், உங்களுக்கு தான் பிரச்னை வரும்; கவனம். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். பயணங்கள் இனிதாக அமையும். மனைவியின் சொல்லும், செயலும் மனதுக்கு பிடிக்கும். தொழில், வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள், கணவரின் அன்பை பெற்று மகிழ்ச்சியாக இருப்பர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு, துன்பம் போக்கும்.

பணியை நேர்த்தியுடன் மேற்கொள்கிற, ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். தெளிந்த சிந்தனையும், பேச்சில் நிதானமும் இருக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு தீரும். உடன்பிறந்தவர்களுக்கு இயன்ற அளவு உதவுவீர்கள். வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். உடல்நிலை பலம் பெறும். பணம் சேமிப்பாகும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். லாபம் கூடும். பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். பெண்கள் தாராள செலவில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றவும்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு, செல்வ வளம் தரும்.

துன்பம் அடைந்தவர்களுக்கு ஆறுதலாக உதவும், மிதுன ராசி அன்பர்களே!

பெரும்பான்மை கிரகங்கள் தாராள பலன் தரும். பேச்சு வசீகரமாக அமைந்து, புதிய நண்பர்களை பெற்றுத் தரும். குடும்பத் தேவைகளை தாராள செலவில் பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர்களின் செயல்பாடு அதிருப்தி தரும். அவர்களை கவனமாக வழி நடத்தவும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர்கள், உங்கள் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, வங்கிக் கடன் கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், வருமானமும் கூடும். பெண்கள், தாய் வீட்டு உதவி பெறுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி அடைவர்.

சந்திராஷ்டமம்: 3.4.16 காலை 6:00 மணி முதல் இரவு 9:21 மணி வரை.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு வெற்றியளிக்கும்.

மன அமைதியே உண்மையான செல்வம் என வாழும், கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், புதன் நற்பலன் தருவர். குடும்பநலனில் அக்கறை வளரும். அதிக வருமானம் பெற, தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள் அன்புடன் நடந்து கொள்வர். புத்திரரின் செயல்கள் அதிருப்தி தரும். அவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள். எதிர்ப்பாளரால் இருந்த தொந்தரவு குறையும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். மனைவி, உங்கள் செயல்களுக்கு ஒத்துழைப்பு தருவார். தொழில், வியாபாரம் செழிக்க அதிக பணிபுரிவீர்கள். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணிகளை நிறைவேற்றுவர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் நன்றாகப் படித்து பரிசு பெறுவர்.

சந்திராஷ்டமம்: 3.4.16 இரவு 9:22 மணி முதல் 5.4.16 இரவு 12:51 மணி வரை.

சமயோசிதமாக செயல்பட்டு சாதனை புரியும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரனால் நன்மை கிடைக்கும். நன்மையும், புகழும் பெருமளவில் வந்து சேரும். தம்பி, தங்கைகளின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் தருவீர்கள். வாகனத்தில் மிதவேகமாக செல்லவும். புத்திரர்களால் பெருமை கிடைக்கும். உடல்நிலை பலம்பெறும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமாக வளர்ச்சி பெறும். பணியாளர்கள், ஓவர்டைம் மற்றும் சலுகைகள் பெறுவர். பெண்கள், கணவரின் அன்பு மழையில் நனைவர். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் கொள்வர்.

சந்திராஷ்டமம்: 6.4.16 அதிகாலை 12:52 மணி முதல் 8.4.16 அதிகாலை 3:22 மணி வரை.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு, சகல நன்மை தரும்.

பொறுப்புடன் பணிகளை நிறைவேற்றும், கன்னி ராசி அன்பர்களே!

செவ்வாய், சனி, கேது, புதன் அளப்பரிய நன்மை வழங்குவர். மனம் உற்சாகமாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் மனதார பாராட்டுவர். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வீர்கள். புத்திரர்களின் ஆர்வம் மிகுந்த செயல் நிறைவேற உதவுவீர்கள். உடல்நிலை பலம்பெறும். மனைவி வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பணியாளர்கள், அதிகாரிகளின் அன்பைப் பெறுவதுடன், பணவரவிலும் முன்னேற்றம் காண்பர். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் பிற துறைகளிலும் ஆர்வம் கொள்வர்.

சந்திராஷ்டமம்: 8.4.16 அதிகாலை 3:23 மணி முதல் 9.4.16 இரவு 11:55 மணி வரை.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும்.

பணிகளை நேர்த்தியாக செய்யும், துலாம் ராசி அன்பர்களே!

சூரியன், குரு, ராகு, சந்திரன் அதிக நன்மை தருவர். மனதில் புத்துணர்வு ஏற்படும். நல்லவர்களின் உதவி கிடைக்கும். தாமதமான செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். தம்பி, தங்கைகளின் உதவி கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.
புத்திரர்களின் செயல்களை கவனித்து வழி நடத்துங்கள். வழக்கு, விவகாரத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். மனைவியின் பாசம் மனதிற்கு நிம்மதி தரும். அரசு சார்ந்த உதவி பெற அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை கூடும். சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் பொறுப்புடன் பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் ஆடம்பரப் பொருள் வாங்குவர். மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு, சிரமம் தீர்க்கும்.

லட்சியம் நிறைவேற உறுதியுடன் செயல்படும், விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், சந்திரன் நன்மை தருவர். தம்பி, தங்கையின் அன்பு உற்சாகம் தரும். வாகனத்தில் மிதவேகமாக செல்லவும். மகளின் யோகத்தால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். மனைவி சொல்லும் ஆலோசனை குடும்ப நலன் சிறக்க உதவும். தொழில், வியாபாரத்தில் போட்டி கடுமையானாலும், மதிநுட்பத்துடன் சரி செய்து விடுவீர்கள். பணியாளர்கள் பணிகளை வேகமாக முடித்து, நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவர். பெண்கள், தாய் வீட்டு உதவி கேட்டுப்பெறுவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு, வினை தீர்க்கும்.

பெருமை பேச விரும்பாத, தனுசு ராசி அன்பர்களே!

கேது, சுக்கிரன், குரு அதிக நன்மை தருவர். புதிய திட்டங்களை செயல்படுத்த நல்ல வாய்ப்பு வரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு குறையும். புத்திரர்களின் கல்வித்திறன் மேம்பட வழிகாட்டுவீர்கள். சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்த வேண்டும். கடன் தொந்தரவு குறையும். மனைவி குடும்ப நலன் சிறக்க பாடுபடுவார். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பால் வளர்ச்சி பெறலாம். பணியாளர்கள் நிறைந்த சலுகை பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பாடுபடுவர். மாணவர்கள் படிப்புடன் பிற துறையிலும் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு வளம் தரும்.

குருவருளும், தெய்வ அருளும் பெற்ற, மகர ராசி அன்பர்களே!

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். புதியவர்களிடம் இதமான அணுகுமுறையை பின்பற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். புத்திரர்கள் உங்கள் ஆலோசனையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வர். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். உடல்நிலை பலம்பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பயணங்கள் இனிய அனுபவம் தரும். தொழில், வியாபாரம் செழித்து சேமிப்பு கூடும். பணியாளர்கள் திறமையாக பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்களின் நற்செயலுக்கு உரிய பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பர்களுக்கும் உதவுவர்.

பரிகாரம்: முருகன் வழிபாடு, தைரியம் வளர்க்கும்.

புதிய கருத்துக்களை மனதார வரவேற்கும், கும்ப ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சஷ்டாஷ்டக அமர்வில் அனுகூலமாக உள்ளனர். இருவரும் போட்டி போட்டு, அளப்பரிய பலன் வழங்குவர். மனதில் இருந்த நம்பகக்குறைவான தன்மை விலகும். பணிகளை நிறைவேற்ற உற்சாகத்துடன் நடைபோடுவீர்கள். குடும்பத்தேவை பெருமளவு பூர்த்தியாகும். வாகனத்தை மாற்றும் நிலை ஏற்படலாம். புத்திரர்களின் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். பூர்வசொத்தில் பணவரவு கூடும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் பாசம் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் இடையூறுகளை சாமர்த்தியமாக சரி செய்வீர்கள். பணியாளர்கள் பணிகளை வேகமாக முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் சேமிப்பில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு, சிரமங்களைக் குறைக்கும்.

பிள்ளை குணம் கொண்ட, மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன், ராகு, சந்திரன் நற்பலன் தருவர். கடினமான பணியையும் எளிதாக நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். செயல்படுத்தி வரும் திட்டங்கள் விரைவாக நடக்கும். வாகனத்தில் மெதுவாகச் செல்லவும். புத்திரர்களின் சேர்க்கை விஷயத்தை கவனித்து, அவர்களை நல்வழியில் நடத்துங்கள். உடல்நிலை சுமாராக இருக்கும். கடன் வாங்குவதை தவிர்த்தால், எதிர்காலத்துக்கு நல்லது. இளமைக்கால நண்பரை சந்திப்பீர்கள். மனைவி, உங்கள் ஆலோசனைப்படி சிறப்பாக கொள்வார். தொழில், வியாபாரம் வளர்ச்சியும், லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் அதிகமாகும். பெண்கள் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. மாணவர்கள் புதியவர்களிடம் நிதானித்து பழகவும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு மங்கள வாழ்வு தரும்

Leave a Reply