நள்ளிரவில் ஏமன் பிரதரை பதவி நீக்கம் செய்தார் அதிபர். பெரும் பரபரப்பு

நள்ளிரவில் ஏமன் பிரதரை பதவி நீக்கம் செய்தார் அதிபர். பெரும் பரபரப்பு
yemen
ஏமன் நாட்டில் கடந்த சில தினங்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில் நேற்றிரவு திடீரென அந்நாட்டின் பிரதமர் காலித் பஹா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அவரை அந்நாட்டின் அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி நீக்கம் செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

நேற்று பின்னிரவு ஏமன் நாட்டில் ஏற்பட்ட இந்த அதிரடி அரசியல் மாற்றம் காரணமாக அந்நாட்டில் பதட்டநிலை காணப்படுகிறது.  காலித் பஹா-வை பதவியில் இருந்து நீக்கம் செய்த அதிபர் மன்சூர் ஹாதி புதிய பிரதமராக அஹமத் ஒபைட் பின் டக்ர் என்பவரை நியமனம் செய்துள்ளார்.

மேலும் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலேவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவந்த முன்னாள் ராணுவ தளபதி அலி மோஹ்சென் அல் அஹ்மர் என்பவரை ஏமன் நாட்டின் துணை அதிபராக நியமனம் செய்து அபட் ரப்போ மன்சூர் ஹாதி உத்தரவிட்டுள்ளார். இந்த திடீர் மாற்றம் ஏம் அரசியலில் பெரும்புயலை கிளப்பியுள்ளது.

Leave a Reply