சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு: சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு: சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம்
chennai iit

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்ட கல்வி நிலையங்களுக்கான தரவரிசையில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு: சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம்
புதுடெல்லி:

நாடுமுழுவதிலும் இயங்கிவரும் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை வெளியிடும் நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இதன்படி, பொறியியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான இந்த ஆண்டு பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மும்பை ஐ.ஐ.டி.-யும், மூன்றாவது இடத்தை கோரக்பூர் ஐ.ஐ.டி.-யும் பிடித்தன.

மேலாண்மை நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், முதலிடத்தை பெங்களூர் ஐ.ஐ.எம்., இரண்டாவது இடத்தை அகமதாபாத் ஐ.ஐ.எம்., மூன்றாவது இடத்தை கொல்கத்தா ஐ.ஐ.எம்., ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன.

Leave a Reply