சிரியா அல்கொய்தா தலைவரை கொன்றது ரஷ்யாவா? அமெரிக்காவா?

சிரியா அல்கொய்தா தலைவரை கொன்றது ரஷ்யாவா? அமெரிக்காவா?
syria
ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் அல்கொய்தா மற்றும்  ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஒரு பக்கம் அமெரிக்காவும், இன்னொரு பக்கம் ரஷ்யாவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்கி வருகிறது. இந்நிலையில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் சிரிய பிரிவு தலைவரான அபு பிராஸ் என்பவரும் அவருடைய கூட்டாளியும் நேற்று நடைபெற்ற ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்த தகவலை உறுதி செய்த அல்கொய்தா ஆதரவாளர்கள் ரஷ்யாவின் ஆளில்லா விமானத்தின் தாக்குதலால்தான் அபு பிராஸ் மரணம் அடைந்ததாக தங்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தான் அபு பிராஸ் இறந்ததாக கிளர்ச்சியாளர்களின் இன்னொரு பிரிவு தெரிவித்து உள்ளது. சிரிய மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து கூறியபோது அபு பிராஸ் ரஷியா அல்லது சிரியாவின் ஆளில்லா தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என கூறியுள்ளது. எனவே அபு பிராஸ் எந்த நாட்டின் ஆளில்லா விமானத்தால் மரணம் அடைந்தார் என்பது தெளிவாகவில்லை.

Leave a Reply