ஒரே கூட்டணியில் நடிகர் சங்கத்தின் எதிரிகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலின்போது பாண்டவர் அணியினர்களுக்கும் சரத்குமார் அணியினர்களுக்கும் பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரும், பாண்டவர் அணியில் துணை நடிகர் பதவிக்காக போட்டியிட்ட கருணாஸூம் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது கருணாஸ் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் ஒரே கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுகின்றது. ஆம், வரும் சட்டமன்ற தேர்தலில் சரத்குமாரும், கருணாஸூம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இருவருமே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை இன்னும் சரியாக சரத்குமார் ஒப்படைக்கவில்லை என சரத்குமார் மீது கருணாஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இருவரும் ஒரே கட்சியின் தலைமையில் ஒரே சின்னத்தில் இணைவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.