வைகோவை கைது செய்ய போலீஸார் திட்டமா? பெரும் பரபரப்பு

வைகோவை கைது செய்ய போலீஸார் திட்டமா? பெரும் பரபரப்பு
vaiko
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறிய வைகோவை போலீசார் விரைவில் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரமக்குடியில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவின் பூமிக்கடியில் உள்ள நிலவறைகளில் எத்தனை ஆயிரம் கோடி பதுக்கி வைக்கப்பட்டிருகிறது. ரோட்டில் போகும் ஏழை விவசாயின் பணத்தை பறிக்கிறது போலீஸ். சிறு வியாபாரிகளின் பணத்தை பறிக்கிறது போலீஸ். அந்த போலீஸாரை கேட்கிறேன், ஜெயலலிதாவின் அரண்மனைக்குள் 11 கண்டெய்னர் லாரி இருக்குதுன்னு சொல்றோம். அதுல கொள்ளை பணம் இருக்குன்னு சொல்றோம். அதனை சோதனையிட தயாரா?” என ஆவேசமாக பேசினார்.

இந்த பேச்சு குறித்து அதிமுக முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் காவல்நிலையத்தில் வைகோ மீது புகார் அளித்துள்ளதை அடுத்து வைகோவை விரைவில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் வைகோ செய்யப்பட்டால், அது மக்கள் நலக்கூட்டணிக்கு பேரிழப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply