பொருளதார கஷ்டத்திலும் மனித நேயத்துடன் நடந்து கொண்ட மே.இந்திய தீவுகள் வீரர்கள்
சீருடை கூட இல்லாமல் டி-20 உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ள வந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, சாம்பியன் பட்டத்தை பெற்று தங்களின் திறமையை நிரூபித்தது மட்டுமின்றி நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் மனதளவில் சோர்வுடன் இருந்தாலும் கோப்பையை வென்றதால் இனிமேல் அவர்களுடைய பிரச்சனை தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஷ்டமான பொருளாதார சிக்கலுடன் உலகக்கோப்பையில் கலந்து கொண்ட மேற்கிந்திய தீவு வீரர்கள் தங்களுக்கு கிடைத்த பரிசுப்பணத்தை முழுவதையும் தாங்களே வைத்துக்கொள்ளாமல் குறிப்பிட்ட ஒரு தொகையை இந்தியாவில் உள்ள அன்னை தெரேசா தொண்டு நிறுவனத்திற்கு நிதியாக வழங்கியுள்ளனர். சாம்பியன் என்பதையும் தாண்டி மனிதநேயம் உள்ள வீரர்களாக மேற்கிந்திய தீவு அணியினர் திகழ்கிறார்கள் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இந்த செய்கையால் அந்த அணி வீரர்கள் மீது இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவர்களால் மரியாதையுடன் பார்க்கப்படுகிறது.