ஜூலை 10-இல் நெட்- தேர்வு: ஏப்.12 முதல் விண்ணப்பிக்கலாம்

ஜூலை 10-இல் நெட்- தேர்வு: ஏப்.12 முதல் விண்ணப்பிக்கலாம்
KPN photo
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் நடத்தப்படும் “நெட்’ தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. வருகிற 12-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.

இப்போது 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது ? இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கு http://cbsenet.nic.in/cbsenet/welcome.aspx என்ற இணையதளம் மூலம் வருகிற 12-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

தேர்வு தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு வருகிற 12-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply