பாஜக மூத்த தலைவர் அத்வானி மனைவி கமலா திடீர் மரணம்

பாஜக மூத்த தலைவர் அத்வானி மனைவி கமலா திடீர் மரணம்

advani wifeபாரதிய ஜனதா கட்சியின் மூத்‌த தலைவர் எல்.கே.அத்வானியின் ம‌னைவி கமலா‌ டெல்லியி‌ல் நேற்று மரணம் அடைந்தார். காலமானார். அவருக்கு வயது 83.

அத்வானியின் மனைவி கமலாவுக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கமலா அவர்களின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மோடி தனது இரங்கல் அறிக்கையில் அத்வானிக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு கமலா அவர்கள் ஊக்கமளிக்கும் சக்தியாக திகழ்ந்ததாக கூறியுள்ளார்.

அத்வானி – கமலா திருமணம் கடந்த 1965ஆம் ஆண்டு நடந்தது. இந்த தம்பதிக்கு ஜெயந்த் என்ற மகனும் பிரதிபா என்ற மகளும் உள்ளனர்.

Leave a Reply