362 கிலோ எடையுள்ள முதலையை பிடித்த அமெரிக்க பாதுகாப்பு படையினர்.

362 கிலோ எடையுள்ள முதலையை பிடித்த அமெரிக்க பாதுகாப்பு படையினர்.

crocodileஅமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் பொதுமக்களையும் விலங்குகளையும் அச்சுறுத்தி கொண்டிருந்த 362 கிலோ எடையுடைய முதலை ஒன்றை அப்பகுதி பாதுகாப்பு படையினர் பிடித்து கொன்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நிம்மதியாக உள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தின் Okeechobee என்ற பிரமாண்டமான முதலை 362 கிலோ எடையுடனும், 15 அடி நீளத்திலும் அப்பகுதி மக்களை பயமுறுத்தி வந்தது. இந்த முதலை அந்த பகுதியில் உள்ள பல விலங்குகளை உணவுக்காக பிடித்துள்ளது. குறிப்பாக அந்த பகுதி மக்கள் ஆசையுடன் வளர்ந்த மாடுகள், ஆடுகள் ஆகியவை இந்த முதலையால் பலியாகின.

இந்நிலையில் இந்த முதலையை வேட்டையாட அப்பகுதி பாதுகாப்பு படையினர் முடிவு செய்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் ஒருவழியாக அந்த முதலையை பிடித்து கொன்றனர். இதனால் இப்பகுதி மக்கள் தற்போது நிம்மதியாக உள்ளனர்.

Chennai Today News: Hunters catch and kill 15ft, 800lb alligator

Leave a Reply