ஐஸ்லாந்து நாட்டின் புதிய பிரதமர் பெயர் அறிவிப்பு. விரைவில் பதவியேற்பு

ஐஸ்லாந்து நாட்டின் புதிய பிரதமர் பெயர் அறிவிப்பு. விரைவில் பதவியேற்பு
island
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தால் ராஜினாமா செய்த ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டர் டேவிட் அவர்களுக்கு பதிலாக புதிய பிரதமர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை விவசாயத் துறை அமைச்சர் பதவி வகித்து வந்த சிகுர்தர் இங்கி ஜோகன்சன் என்பவர்தான் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்றவுடன் ஐஸ்லாந்து நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தவும் நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது

ஐஸ்லாந்து அதிபர் ஒப்புதல் அளித்ததும் குர்தர் இங்கி ஜோகன்சன் பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இலையுதிர் காலத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும், அதேசமயம் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி, நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஐஸ்லாந்து நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா பேப்பர்ஸ்’ விவகாரத்தில் ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டர் டேவிட் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வின்ட்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக அவரும் அவரது மனைவியும் இருப்பதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வெளிநாட்டில் அவர் பல கோடி டாலர் பணத்தை பதுக்கியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டதால் தனது பதவியை சிக்முண்டர் டேவிட் ராஜினாமா செய்தார்.

Leave a Reply