பனாமா லீக்ஸ் விவகாரம். டிவி நேர்காணலில் உண்மையை ஒப்புக்கொண்ட இங்கிலாந்து பிரதமர்

பனாமா லீக்ஸ் விவகாரம். டிவி நேர்காணலில் உண்மையை ஒப்புக்கொண்ட இங்கிலாந்து பிரதமர்
britain pm
சமீபத்தில் கசிந்த ‘பனாமா பேப்பர்ஸ்’ உலக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இதனால் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘பனாமா லீக்ஸ்’ என்றழைக்கப்படும் ரகசிய ஆவண தகவல்கள் கசிந்தது. இதில் ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா, ஐஸ்லாந்து உள்பட உலக தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த பட்டியலில்  இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை இயன் கேமரூன் பெயரும் இருந்தது.  தனது தந்தைக்கு சொந்தமான  வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கும் பங்கு உள்ளது என்பதை டேவிட் கேமரூன் இதுவரை மறுத்து வந்த நிலையில் தற்போது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடந்த நேர்காணலில் டேவிட் கேமரூன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கடந்த காலங்களில் என்னிடம் பங்குகள் இருந்தன. எனது தந்தை ஒரு பங்கு தரகர் என்பதால் இது இயல்பான ஒன்றுதான். எனினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதால் கடந்த 2010ம் ஆண்டே அவற்றை விற்றுவிட்டேன். எனக்கும் எனது மனைவி சமந்தாவுக்கு 5000 யூனிட்கள் வரை பங்குகள் இருந்தன. அதன் மதிப்பு 30 ஆயிரம் பவுண்டாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஒப்புதல் இங்கிலாந்து அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply