இவரைத் தெரியுமா?- டியோன் வெய்ஸ்லர்
ஹெச்பி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அறிவியலில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார்.
2013-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஹெச்பி பிரிண்டிங் மற்றும் சிஸ்டத்தின் நிர்வாகத் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை லெனோவா நிறுவனத்தின் மொபைல் பிரிவிற்கு தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர். மேலும் லெனோவா நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிரிவிற்கு தலைவராக இருந்தவர்.
ஏசர் நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவில் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர். 11 வருடங்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றிய இவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.