மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராவாரா விஜய்மல்லையா?
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் பெற்றுவிட்டு அந்த கடனை கட்டாமல் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது தொடர்ந்த் வழக்கில் இன்று அவர் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது இந்த சம்மனின்படி இன்று மும்பை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விஜய்மல்லையா ஆஜராவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய்மல்லையா தற்போது பிரிட்டனில் இருப்பதாகவும் இன்று அவர் ஆஜராகுவது குறித்த இதுவரை எந்தவித தகவல்களும் இல்லை என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியபோது “மும்பை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விஜய் மல்லையா, இன்று நேரில் ஆஜராவாரா? என்ற தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை அவர் ஆஜராகவில்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள்’ என்று கூறினார்.