ஐ.பி.எல் போட்டிக்கு தண்ணீர் தரமுடியாது. மகாராஷ்டிரா முதல்வர் திட்டவட்டம்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில்தான் இறுதிப்போட்டி உள்பட முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில மக்களின் குடிநீர் தேவைக்கே அங்கு குடிநீர் பற்றாக்குறையாக இருப்பதாகவும் இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் எந்த ஐ.பி.எல் போட்டிக்கும் அரசு குடிநீர் வழங்காது என்றும் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் மகாராஷ்டிராவில் இருந்து மாற்றப்பட்டாலும், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் 20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு ஐ.பி.எல் நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து வேறு சில மாநிலங்களும் குடிநீர் மற்றும் மைதானத்திற்கு தேவையான தண்ணீரை தர மறுப்பதால் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி பிரச்சனையில்லாமல் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Chennai Today News: No water for IPL matches said Maharastra CM