மம்தாவிடம் இருப்பது வெறும் ரூ.18 ஆயிரம் தான். முழு சொத்து மதிப்பு விபரம்
தமிழகத்தை போலவே மேற்குவங்க மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ள நிலையில் மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று பவானிபூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.30,45,012 எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு இதே தொகுதியில் இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டபோது அவரது சொத்து மதிப்பு ரூ.15,84,189 ஆக இருந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்த மதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு விவரம்:
ரொக்கம்: ரூ.18,436
ஆபரணத் தங்கம்: 9 கிராம் (மதிப்பு: ரூ.26,380
உடற்பயிற்சி இயந்திரம்: மதிப்பு ரூ.2,15,088.
இதுதவிர இன்னும் பிற உடைமைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களிலேயே மிக குறைந்த சொத்து கொண்டவர்களில் ஒருவராக மம்தா பானர்ஜி உள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்பட மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் கோடிகளில் சொத்து மதிப்பு காட்டியுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் வெறும் ரூ.30 லட்சம் என தனது சொத்து மதிப்பை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட ஆச்சரியமாக இம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சூர்ஜயா கன்ட மிஸ்ராவின் சொத்து மதிப்பு வெறும் ரூ.25,80,459 ஆகும். இவரது சொத்து மதிப்பு மம்தாவைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.