கொல்லம் பராவூர் கோவிலில் பயங்கர தீவிபத்து. 84 பேர் பரிதாப பலி

கொல்லம் பராவூர் கோவிலில் பயங்கர தீவிபத்து. 84 பேர் பரிதாப பலி

keralaகேரள மாநிலத்தில் கொல்லம் அருகேயுள்ள பராவூர் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் வான வேடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 84 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் ஒருசிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதல்வர் உம்மன்சாண்டி சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து குறித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா செய்தியாளர்களிடம் கூறியபோது, ”தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பாதிப்படைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்று கூறினார்.

மேலும் கொல்லம் கோவில் நிர்வாகத்தினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், திருவிழாவில் பட்டாசு வெடிக்க அனுமதித்தோர் மற்றும் கோயிலுக்கு பட்டாசுகள் விநியோகம் செய்த ஒபப்பந்ததாரர் சுரேந்திரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply