ஹிட்லரின் வீட்டை ஆஸ்திரிய அரசு விலைக்கு வாங்கியது ஏன்? புதிய தகவல்
முதலாம் உலகப்போரில் உலக நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர். இவரது நாஜிப்படைகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தபோதிலும் போரில் ஹிட்லர் வீழ்த்தப்பட்டார். கடந்த 1880ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஹங்கேரி நாட்டில் பிரான்னா என்ற இடத்தில் ஹிட்லர் பிறந்தார். இந்த இடம் தற்போது ஆஸ்திரியா நாட்டில் உள்ளது. ஹிட்லர் பிறந்த நகரில் அவருக்கு சொந்தமான வீடு ஒன்று தற்போதும் உள்ளது
இந்நிலையில் நாஜி படையின் அனுதாபிகள் ஹிட்லரின் வீட்டை அவரது நினைவு இல்லமாக மாற்ற முயற்சி செய்து வருவதாக ஆஸ்திரியா அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும் என்பதற்காக ஹிட்லர் பிறந்த வீட்டை விலைக்கு வாங்கி ஆஸ்திரியா அரசே விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஹிட்லரின் வீடு நினைவு சின்னமாகவோ புனித தலமாகவோ மாறிவிடக்கூடாது என்பதற்காகவே ஆஸ்திரியா அரசு ஹிட்லரின் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.