இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவியுடன் இந்தியா வருகை

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவியுடன் இந்தியா வருகை
williams
ஒருவார அரசு முறை பயணமாக இங்கிலாந்து நாட்டின் பட்டத்து இளவரசர் வில்லியம், மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அரச குடும்பத்து தம்பதியினர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மும்பை தாஜ் ஓட்டலில் தங்கினர். இந்த ஓட்டலில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுக்கு நினைவிடம் வைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் மனைவியுடன் சென்று வில்லியம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த புத்தகத்திலும் இரங்கல் குறிப்பு எழுதினர்.

அடுத்ததாக மும்பையை சேர்ந்த மேஜிக் பஸ், டோர்ஸ்டெப், சைல்ட் லைன் ஆகிய 3 அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றனர். ஓவல் மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கேத் மிடில்டன் பள்ளி குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடினார். பின்னர் வர்த்தக தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அளித்த விருந்தில் இருவரும் கலந்து கொண்டனர். மும்பை பயணத்தை முடித்துவிட்டு இன்று டெல்லி செல்லும் வில்லியம்ஸ்-மிடில்டன் தம்பதியினர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்தியாவில் ஒரு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வில்லியம்-மிடில்டன் தம்பதி, புகழ்பெற்ற தாஜ் மகாலை சுற்றிப் பார்க்க உள்ளனர். வில்லியமின் தாய் டயானா, 24 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்திருந்த போது தாஜ் மகாலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வார சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இருவரும் பூடான் செல்கின்றனர்.

Leave a Reply