நேற்று முளைத்த மக்கள் தேமுதிக, இன்று திமுக கூட்டணியில் இணைந்தது.
தேமுதிகவின் அதிருப்தியாளர்கள் சந்திரகுமார் தலைமையை ஏற்று அவருடைய மக்கள் தேமுதிக கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில் இன்று இந்த கட்சிக்கு திமுகவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பெரும் முயற்சி செய்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆசை கிட்டத்தட்ட பாதி நிறைவேறிவிட்டது. ஆம் தேமுதிகவின் இன்னொரு பிரிவான மக்கள் தேமுதிகவுடன் கூட்டணி வைத்து கீழே விழுந்த பழத்தை எடுத்து மீண்டும் பாலில் போட்டுள்ளார் கருணாநிதி
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திரகுமார் தலைமையிலான குழு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் வெளியே வந்த சந்திரகுமார், ‘திமுகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், திமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யவுள்ளதாகவும் கூறினார்.
ஏற்கனவே தேமுதிகவில் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இருக்கும் நிலையில் மக்கள் தேமுதிகவுக்கு தொகுதிகளை கருணாநிதி ஒதுக்குவாரா? அல்லது இதயத்தில் மட்டும் இடம் கொடுப்பாரா? என்பது நாளை தெரியும்.