திமுக கூட்டணி மக்கள் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி?
தேமுதிகவில் இருந்து பிரிந்து மக்கள் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்த மறுநாளே தி.மு.க. கூட்டணிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தார் சந்திரகுமார். இந்நிலையில் மக்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்திய சந்திரகுமார், மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டதோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்புக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், ”தி.மு.க. அரசியல் அந்தஸ்தை கொடுத்து எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி தந்துள்ளனர். தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நானும் (சந்திரகுமார்), மேட்டூர் தொகுதியில் பார்த்திபனும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் சி.எச். சேகரும் போட்டியிடுகிறோம். இந்த 3 தொகுதிகளிலும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று கூறினார்.