கேரளா கோவில்களில் இரவில் பட்டாசு வெடிக்க தடை. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கேரளா கோவில்களில் இரவில் பட்டாசு வெடிக்க தடை. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

kerala-7591கேரள மாநிலத்தில் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோயில் திருவிழாவின் போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட வெடி விபத்தில் 110 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்த கேரள மாநில ஐகோர்ட் மூத்த நீதிபதி வி.சிதம்பரேஷ்பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “கேரளாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் தொட்டதில் பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அனு சீனிவாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவில் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகளை நடத்த தடை விதித்தனர். பகல் நேரங்களில் பட்டாசு வெடிக்க தடை ஏதும் இல்லை என்றும் அதேநேரம் பகலில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

பரவூர் புட்டிங்கல் தேவி கோயிலில் நிகழ்ந்த வெடி விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமா என்பது குறித்தும், இதில் தேச விரோத சக்திகளின் சதி இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேரள மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து மாநில காவல் துறையும், கொல்லம் மாவட்ட நிர்வாகமும் சரியான அணுகுமுறையைக் கையாளவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து முறையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply