வீடியோ கேமை பார்த்து 46வது மாடியில் இருந்து விழுந்து உயிரை விட்ட 6வயது சிறுமி
குழந்தைகள் தற்போது பாட புத்தகங்களை படிக்கும் நேரத்தை விட செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதில்தான் அதிக நேரம் செலவு செய்கின்றனர். இந்நிலையில் 6 வயது பெண் குழந்தை ஒன்று அனிமேஷன் கேம்ஸ் ஒன்றை பார்த்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று ஜப்பான் நாட்டில் நடந்துள்ளது.
ஜப்பான் நாட்டின் ஒசாகா பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமி, டிவிடி ஒன்றில் அனிமேஷன் படத்தை பார்த்தது. அந்த அனிமேஷன் கேமில் ஒரு உருவம் பெரிய பெரிய கட்டிடங்களை தாண்டி செல்வதை பார்த்து தானும் அதுமாதிரி பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. உடனடியாக 46வது மாடியின் ஜன்னலை திறந்து அங்கிருந்து அந்த சிறுமி கீழே விழுந்து பரிதாபமாக உயிரை இழந்தது. இந்த சம்பவத்தை எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து ஒரு தம்பதியினர் நேரடியாக பார்த்தாலும் அவர்களால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவத்தை அடுத்து சிறுவர், சிறுமிகள் வீடியோ கேமை பார்க்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூகநல ஆர்வலர்கள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள்தான் தங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.